மூடு

ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்

வகை வரலாற்று சிறப்புமிக்கது

இராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக இரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது. ராஜா தேசிங்கு `கப்பம்’ கட்ட மறுத்ததால், செஞ்சிக்கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் படையெடுத்து ராஜாவைக் கொன்றனர். ராஜா தேசிங்கின் உடல் எரிக்கப்பட்டபோது, அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.
இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ஆற்காடு பாலாற்றின் மறு கரையில் ராஜாவுக்கும், ராணிபாயிக்கும் பளிங்குக் கற்களால் மணிமண்டபங்களை எழுப்பினார். ராணியின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில்தான் `ராணிப்பேட்டை’ நகரையும் உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது.