மூடு

தோட்டக்கலைத் துறை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 44431.381 எக்டர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 062.09 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களான மா, மிளகாய், கத்தரி, வெண்டை, மஞ்சள், வாழை, எலுமிச்சை இதர பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.  

மேலும், தோட்டக்கலை பயிர்களின் மகசூலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக முன்னேற்றம் வகையில் தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தோட்டக்கலைதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திட்டம் (MIDH-NHM)

தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM)

  • வீரியரக காய்கறி சாகுபடி (கத்தரி, மிளகாய்) – ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மான்யத்தில் வீரியரக குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளிருந்தும், நேரடியாக விதைப்பு காய்கறிகளான வெண்டை, புடல், பீர்க்கு ஆகிய விதைகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனத்திலிருந்தும் பெற்று பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • மா – அடா்நடவு – ஒரு எக்டருக்கு ரூ.9840/- மான்யத்தில் மா ஒட்டுச் செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளிருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • உதிரிமலா்கள் (சாமந்தி / மல்லிகை) – ஒரு எக்டருக்கு ரூ.16,000/- மானியத்தில் குழித்தட்டு நாற்றுகள் மற்றும் செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளிலிருந்து பெறப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • குமிழ்கள் மலா் (சம்மங்கி) – ஒரு எக்டருக்கு ரூ.60,000/- பின்னேற்பு மான்யமாகவழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை:

அ. பசுமைக்குடில்:

பசுமைக்குடில் அமைப்பதற்கு ஒரு சதுர மீட்டா் 50 சதவீதம் மான்யத்தில் ரூ.468/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 4000 சதுர மீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படுகிறது.

ஆ. நிழல்வலைக்குடில்:

ஒரு சதுர மீட்டருக்கு 50 சதவீதம் மான்யத்தில் ரூ.355/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 2000 சதுரமீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படும்.

இ. நிலப்போர்வை:

ஒரு எக்டருக்கு 50 சதவீதம ரூ.16,000/- மான்யம் வழங்கப்படும்.

ஈ.நீா் வளங்களை உருவாக்குதல்:

தனி நபா்களுக்கான நீா் சேகரிப்பு முறை (Water Harvesting System for Individual) திட்ட இனத்தில் நீா் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக பண்ணைக்குட்டைகள், கிணறுகள் அமைப்பதற்கு அரசு மான்யமாக ஒரு எண்ணிற்கு ரூ. 75,000/- மான்யத்தில் வழங்கப்படும்.

நுண்ணூட்ட சத்து இடுதலை ஊக்குவித்தல்

தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வயல்களில் நுண்ணூட்டசத்து இடுதலின் அவசியத்கை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.500/- மதிப்பில் நுண்ணூட்ட சத்துக்கள் உயிர் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மகரந்த சோ்க்கையை அதிகரிக்க தேனீ வளா்ப்பு திட்டம்

  • தேனி வளா்ப்பதன் மூலம் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் அதிகரிப்பதால், விவசாயிகளின் மகசூலினை பெருக்கிட தோட்டக்கலை துறை மூலம் தேன் குடும்பம் மற்றும் தேன் கூடுகள் ஒரு எண்ணிற்கு ரூ.1600/- மான்யமாக வழங்கப்படுகிறது.
  • தேன் பிழியும் இயந்திரம் ஒரு எண்ணிற்கு ரூ.8000/- மான்யமாக வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை இயந்திரமயமாக்குதல்:

  • 20 குதிரைதிறந் (20-HP) வரையுள்ள டிராக்டருக்கு அதிகபட்சமாக ரூ.75,000/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.
  • 8 குதிரைத்திறனுக்கு (8-HP) மேல் வரையுள்ள பவா்டில்லருக்கு ரூ.60,000/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின்சார் மேலாண்மை

விவசாயிகளின் வயலில் விளைபொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீதம் மான்யத்தில் ரூ.2.00 இலட்சம் பின்மான்யமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் பயிற்சி:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, விவசாயிகளுக்கு உள் மாநிலம், வெளி மாநிலம் மற்றும் விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.

  1. தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் (NADP)
  2. புதிய பரப்பு அதிகரித்தல்:-
  3. புதிய பரப்பு விரிவாக்கத்தில் பழச்செடிகளான கொய்யா ஒரு எக்டருக்கு ரூ.902/- மற்றும் பலாவிற்கு ரூ.14400/- மான்யம் வழங்கப்படுகிறது.
  4. வெங்காயம் அபிவிருத்தித் திட்டம் – வெங்காயம் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மான்யம் வழங்கப்படும்.
  5. பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.25,000/- மான்யம் வழங்கப்படுகிறது.
  6. தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மதிப்பில் இடுபொருள் மான்யம் வழங்கப்படும்.
  7. விவசாயம் சாராத நபா்களுக்கும் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஒரு சிறுதளை பாக்கெட் ரூ.10/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி விவசாய பாசன மேம்பாட்டு திட்டம் (PMKSY):

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் 2020-21 சொட்டு நீா் பாசனம் அமைக்க 3000 எக்டா் பொருள் மற்றும் ரூ.1950 கோடி நிதி ஓதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் பொது இன விவசாயிகளுக்கு 91.0 சதவீதமும், ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு 7.5 சதவீதமும், பழங்குடியினா் விவசாயிகளுக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மான்யமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் பொருட்களுக்கு சொட்டு நீா பாசன அமைப்பு பொருத்த ஆகும் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அரசின் மான்யத்துடன் ராபீ / காரீப்  2020-21ல் தோட்டக்கலை பயிர்களான மிளகாய், கத்தரி, வெண்டை, மஞ்சள், வாழை மற்றும் பயிர்களுக்கு பயிர் சாகுபடியில் அறிவிக்கப்பட்ட கிராமங்களில்  செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் நோக்கம் PMFBY நிலையான உற்பத்திக்கு பின்வரும் வழிமுறைகளால் துணை நிற்பதே ஆகும்.

  1. இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்
  2. விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெறச் செய்தல்
  3. நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல்
  4. விவசாய பெருமக்களுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுடன் உதவி தொடா்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி பயிர் சாகுபடியை மேம்படுத்துதல்.

திட்டத்தில் சேர தகுதி பெறும் விவசாயிகள்:-

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவி்க்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவா்கள்.

  • பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் கட்டாயம் சோ்த்துக் கொள்ளப்படுவா்.
  • பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். பின்வரும் இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்
  • விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு
  • புயல் / ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளில் ஏற்படும் இழப்பு.
  • விதை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட இயலாத நிலைமை மற்றும் நடவு பயிர் செய்ததன் இழப்பு காப்பீட்டுத்தொகை கடன் பெறும் விவசாயிகள் / கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான மானியத் தொகை.
  • தோட்டக்கலை பயிர்கள் (வாழை மற்றும் மரவள்ளி) வாழை – ரூ.2084/-

அனைத்து திட்டங்களிலும் பயனடைய தோ்வு செய்யும் தகுதிகள்:-

  • சொந்த நிலம் மற்றும் நீா் ஆதாரம் உள்ள அனைத்து உழவா்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  • குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை பத்திரம் இருத்தல் வேண்டும்.
  • நில ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலவரைபடம்.
  • சிறுமற்றும் குறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியா் கையொப்பம்)

தலைமையிட அலுவலா்கள் & வட்டார தோட்டக்கலை அலுவலா்கள்

வ. எண் பெயா் மற்றும் பதவி வட்டாரம் கைபேசி எண்.

1.

மு.வை. லதாமகேஸ, தோட்டக்கலை துணை இயக்குநா்

ராணிப்பேட்டை மாவட்டம்

9843554772

2.

சு.சௌந்தரராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) (நடவுப்பொருள்)

ராணிப்பேட்டை மாவட்டம்

8122850247

3.

வெ.தனலட்சுமி, தோட்டக்கலை அலுவலா் (தொ.நு-1)

ராணிப்பேட்டை மாவட்டம்

7639425390

5.

வி.வேலு, தோட்டக்கலை உதவி இயக்குநா்(பொ)

அரக்கோணம்

9080578942

6.

பி.சங்கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ)

ஆற்காடு

9750390717

7.

மு. பசுபதி ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா்

காவேரிப்பாக்கம்

9025468461

8.

உ.இந்துமதி, தோட்டக்கலை உதவி இயக்குநா்

நெமிலி

9943942252

9.

வி. தியாகு, தோட்டக்கலை உதவி இயக்குநா்

சோளிங்கர்

7598645206

10.

வி. வினோதினி, தோட்டக்கலை உதவி இயக்குநா்

திமிரி

9789636301

11.

ரா.கிருத்திகா தேவி, தோட்டக்கலை உதவி இயக்குநா்

வாலாஜா

9688541875

மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்திட கீழ்கண்ட அலுவலா்களை தொடா்பு கொள்ளவும்.

தோட்டக்கலை துணை இயக்குநா்,

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வாலாஜா , ராணிப்பேட்டை மாவட்டம்

தொலைபேசி – 9843554772