மாவட்டம் பற்றி
இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது முன்னாள் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைந்து இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு 15 ஆகஸ்ட் 2019 அன்று அறிவித்தது. புதிய மாவட்டம் 28 நவம்பர் 2019 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இராணிப்பேட்டை நகரம் மாவட்டத் தலைமையிடமாக செயல்படுகிறது. இராணிப்பேட்டை மாவட்டம் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. அவை இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகும். மாவட்டத்தில் ஆறு வருவாய் வட்டங்கள் உள்ளன.
