அரசு நலத்திட்டங்கள்
வரிசை எண் | திட்டங்கள் |
---|---|
1 | கண்டறிதல் |
2 | பராமரிப்பு உதவித்தொகை |
3 | மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கி கடன் உதவி மற்றும் திட்டங்கள் |
4 | சிறப்புக் கல்வி |
5 | மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை |
6 | திருமண நிதியுதவி |
7 | மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் |
8 | கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு |
9 | தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள் |
10 | மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்ச்சி |
11 | முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் |
12 | மாநில அரசு மற்றும் மத்திய அரசு விருதுகள் |
வ. எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 | மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) |
தகுதி: தேவைப்படும் ஆவணங்கள்: வழங்கப்படும் உதவி: |
http://www.swavlambancard.gov.in மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
2 | மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை |
ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இராணிப்பேட்டையில் வழங்கப்படுகிறது. தகுதி: தேவைப்படும் ஆவணங்கள்: கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்று காது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் –அரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று மனவளர்ச்சி குன்றியவர் – 12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று. 12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று. மனநலம் பாதிக்கப்பட்டவர் –அரசு மனநல மருத்துவரிடம் சான்று. பல்வகை மாற்றுத் திறனாளிகள் வழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை |
தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர். வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்
வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- |
விண்ணப்பம் |
2 |
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
|
தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- |
விண்ணப்பம் |
3 |
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை |
தகுதி: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/ |
விண்ணப்பம் |
4 |
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை |
தகுதி: 75 விழுக்காடுக்கு மேல் உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- |
விண்ணப்பம் |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்
|
தகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும், 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.
வழங்கப்படும் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும், மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும் |
விண்ணப்பம் |
2 |
தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி |
தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்
வழங்கப்படும் உதவி: தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள்/நகர் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன், அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும். |
|
3 |
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)
|
தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
தொடர்பு அலுவலர்: பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், இராணிப்பேட்டை |
இணையதள முகவரி : http://www.kviconline.gov.in/pmegpeportal |
4 |
படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)
|
தகுதி: 1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.
தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
தொடர்பு அலுவலர்: பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், இராணிப்பேட்டை |
இணையதள முகவரி : http://www.msmeonline.tn.gov.in/uyegp |
5 |
வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை |
தகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு
வழங்கப்படும் உதவி: தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600/- 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.750/- பட்டப்படிப்பு ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. |
தொடர்பு அலுவலர்: துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், இராணிப்பேட்டை |
6 |
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் |
தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள் லேசான மனவளர்ச்சி குன்றியவர்கள், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்கள், 18 வயதுக்கு மேல் 45 வயது வரை, தையல் பயிற்சி முடித்தவர்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று.
வழங்கப்படும் உதவி: விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம். |
விண்ணப்பம் |
7 |
ஆவின் விற்பனை மையம் |
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் விற்பனை மையம் ரூ.50000 மானியம் மற்றும் முன் வைப்பு தொகை. |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை |
தகுதி: 1 முதல் 8ம் வகுப்பு வரை
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு
வழங்கப்படும் உதவி: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000 |
விண்ணப்பம் |
2 |
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை |
தகுதி: 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.
வழங்கப்படும் உதவி: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ. 4000/- |
விண்ணப்பம் |
3 |
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை |
தகுதி: பட்டய படிப்பு, கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள், மருத்துவ கல்வி பயில்பவர்கள்.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.
வழங்கப்படும் உதவி: பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.6000/- முதுகலை பட்டப்படிப்பு ரூ.7000/- |
விண்ணப்பம் |
4 |
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை |
தகுதி: முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு
வழங்கப்படும் உதவி: கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது.
9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
11-ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/ வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும். |
இணையதள முகவரி : http://www.scholarships.gov.in |
5 |
சட்டக் கல்வி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை |
சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பார்வையற்ற, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்யவும், சட்ட புத்தகங்கள் வாங்கவும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கி வருகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் நகல், சட்டப்படிப்பு சான்றிதழ் நகல், பார் கவுன்சில் உறுப்பினர் சான்றிதழ் நகல். |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை |
தகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று
வழங்கப்படும் உதவி: வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை |
விண்ணப்பம் |
2 |
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை |
தகுதி: பார்வையற்றவர் என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 3.
வழங்கப்படும் உதவி: மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து சலுகை. |
விண்ணப்பம் |
3 |
அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை |
தகுதி: தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்
வழங்கப்படும் உதவி: தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4-இல் ஒரு பங்கு பஸ் பாஸ்
|
தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்க வேண்டும் |
4 |
அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை |
தகுதி: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.
வழங்கப்படும் உதவி: துணையாளருடன் தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4-இல் ஒரு பங்கு பஸ் பாஸ் |
விண்ணப்பம் |
5 |
இரயில் பயன சலுகை (நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்)
|
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறன் தன்மைக்கு ஏற்ப அரசு எலும்பு முறிவு மருத்துவர் அல்லது கண் மருத்துவர் அல்லது காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது மனநோய் மருத்துவாரிடம் விண்ணப்பத்தில் சான்று பெற்று இரயில் நிலையத்தில் சமர்ப்பித்து பயண சலுகை பெறவேண்டும். |
விண்ணப்பம் |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி |
தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது. 18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று
வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு, தாலிக்கு தங்கம் 8 கிராம் |
விண்ணப்பம் |
2 |
பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி |
தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; தம்பதியரில் ஒருவர் பட்டயம்/பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். முதல்திருமணமாக இருத்தல் வேணடும். திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது. 18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல். ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி சான்று.
வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திலம் ரூபாய் 25000 மதிப்பு, தாலிக்கு தங்கம் 8 கிராம் |
விண்ணப்பம் |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மாற்றுத்திறனரிளிகளுக்கான உதவி உபகரணங்கள்
|
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்
வழங்கப்படும் உதவி: தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது 1) மூன்று சக்கர வன்டி 2) சக்கர நாற்காலி 3) ஆக்சிலரி மற்றும் எல்போ ஊன்றுகோல் 4) சி.பி. சேர் 5) காலிபர் 6) நவீன செயற்கை கால் 7) ரோலேடார் 8) முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுகக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 9) தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 10) காதுக்கு பின் அணியும் காதொலி கருவி 11) தடைகளை அறியும் பார்வையற்றவர்களுக்கான மடக்கு ஊன்றுகோல் 12) பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி 13) பிரெய்லி கை கடிகாரம் 14) எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி (பார்வைகுறையுடைய மாணவர்களுக்கு மட்டும்) |
விண்ணப்பம் |
2 |
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் |
தகுதி: 1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். 2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று
வழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர். |
விண்ணப்பம் |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|
1 |
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இட ஒதுக்கீடு |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
2 |
இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-1 முதன்மைத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
3 |
வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4% இட ஒதுக்கீடு |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|
1 |
விபத்து மரணம் ரூ. 1 இலட்சம் |
|
2 |
விபத்து ஊனம் ரூ 25000 |
|
3 |
ஈம சடங்கு செலவுகள் மற்றும் இயற்கை மரணம் ரூ.17,000 |
|
4 |
கல்வி உதவித்தொகை ரூ.1000 முதல் ரூ.6000 வரை |
|
5 |
திருமண நிதியுதவி ரூ.2000 |
|
6 |
பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மகப்பேரு/அறுவை சிகிச்சை ரூ.6000, கருச்சிதைவு கருக்கலைப்பிற்கான உதவி ரூ.3000 |
|
7 |
மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடு செய்தல் ரூ.500 |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|
1 |
மல்டிமீடியா போட்டோகிரபி எடிட்டிங் ஆகிய பயிற்சிகள் தேசிய திரைப்பட தொழிநூட் பயிற்சி நிறுவனம் எழும்பூர், சென்னை மூலமாக வழங்கப்படுகிறது |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
2 |
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொருத்துநர் பயிற்சி அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம் கிண்டி, சென்னை உளுந்தூர்பேட்டை மற்றும் நாகர்கோயில் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. |
https://skilltraining.tn.gov.in/ |
3 |
திறன் மேம்பாட்டு பயிற்சி |
https://skilltraining.tn.gov.in/ |
4 |
பார்வையற்றவர்களுக்கான புத்தக கட்டுனர் பயிற்சி அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லியில் வழங்கப்படுகிறது. |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | தகுதி/தேவைபடும் ஆவணங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|---|
1 |
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை |
தகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்
வழங்கப்படும் உதவி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை |
தொடர்பு அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
குடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் |
2 |
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி |
தகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள காதுகேளாதவர்கள்
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று மருத்துவ காப்பீடு அட்டை
வழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி |
தொடர்பு அலுவலர்: அனைத்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது துறை தலைவர், காது மூக்கு தொண்டை பிரிவு அவர்களை தொடர்பு கொள்ளவும். |
3 |
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவின செயற்கை கால் செயற்கை கை |
தகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள கால்கள் இழந்தவர்கள் கைகள் இழந்தவர்கள்
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் புகைப்படம், மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் மருத்துவர் சான்று மருத்துவ காப்பீடு அட்டை
வழங்கப்படும் உதவி: விலையில்லா நவின செயற்கை கால் செயற்கை கை |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இராணிப்பேட்டை |
வரிசை எண் | நலத்திட்டங்கள் | விண்ணப்பம் பதிவிறக்கம்/இணையதள முகவரி |
---|---|---|
1 |
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா மாநில அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளுக்கு முன்னதாக மாவட்டட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். |
விண்ணப்பம் |
2 |
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா மத்திய அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. |
வழிமுறை & விண்ணப்பம் |
3 |
சுதந்திர தின விழா மாநில அரசு விருதுகள்; மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. |
வழிமுறை & விண்ணப்பம் |