மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சிப் பணி நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் மாவட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவா் தன்னுடைய நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு ஒரு மாவட்ட நீதிபதியாகவும் திகழ்கிறார். அவர் திட்டமிடல், மேம்பாடு, சட்டம் (ம) ஒழுங்கு, பொது நிர்வாகம் முதலான பணிகளையும் முக்கியமாக மாவட்டத்தின் நிர்வாகத்தையும் கையாளுகிறார்.
கூடுதல் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்டத்தின் வருவாய் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான சட்ட திட்டங்களை செயல்படுத்துகிறார். மேலும் அவர் கூடுதல் மாவட்ட நீதிபதி என்றும் அழைக்கப்படுகிறார். அவர் வருவாய் நிர்வாகம், நிலநிர்வாகம், குடிமைப் பொருள் வழங்கல் ஆகிய பணிகளை முக்கியமாக கையாளுகிறார். மாவட்ட நிர்வாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுகிறார்.
துணை ஆட்சியர்கள் மாவட்ட நிர்வாகத்தினை செவ்வனே நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பேருதவி புரிகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்தல், குறிப்பாக பொது நிர்வாகத்திலும் கவனம் செலுத்துகிறார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றும் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சி), நகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளுர் திட்டக்குழுமம் ஆகிய துறை சம்பந்தப்பட்ட பணிகளில் உதவி புரிகின்றனர்.