மூடு

கைவினை பொருட்கள்

வாலாஜா பிரம்பு அறைக்கலன்கள்

வாலாஜா பிரம்பு அறைக்கலன்கள்

சுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தயாரிப்பில் தற்பொழுது பலரும் பயிற்ச்சி பெற்று ஈடுபட்டு வருகின்றனர். கதர் வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கத்தின் மூலமாக இந்த தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

 

வாலாஜா பட்டு

Walajah Silk

வாலாஜாபேட்டை பட்டு நகரம் என்று பெயர் விளங்கிய ஒரு இடமாகும். ஆற்காடு நவாப் ஆட்சி காலங்களில் பட்டு நெசவு இங்கு செழித்து வளர்ந்துள்ளது. இன்றும் வாலாஜா பட்டு புடவைகள் தரத்திற்கும், நிறங்களுக்கும், வடிவமைப்புக்கும் புகழ் பெற்றவை.