மூடு

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம்

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013

தமிழ்நாட்டில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் புகாரை விசாரணை மேற்கொள்ள தொடர்பு அலுவலர்களாக செயல்படுகின்றார். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013-ன் படி, அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக புகார் குழு (ICC) நிறுவப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் உள்ளூர் புகார்கள் குழுவிற்க்கு (LCC) மாவட்ட அலுவலராக பெண் உயர் அதிகாரி தலைவராகவும், மாவட்ட சமூக நல அலுவலர் செயலாளராகவும், மூன்று உறுப்பினர்களைக் கொண்டு இக்குழு செயல்பட்டு வருகிறது.

  •  உள்ளூர் புகார் குழு (LCC) மற்றும் தொடர்பு அலுவலர்கள் விபரம் (PDF 96 KB)  
  • பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 (PDF 224 KB)
  • பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 – கையேடு (PDF 4 MB)