மூடு

இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

வகை மதம் சார்ந்த

இரத்தினகிரி மலையின் மீது பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகன் இரு கோலங்களில் காட்சி தருகிறார். ஒன்று வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்குாலம் மற்றொன்று குருகோலம் ஆகும். கிரானைட் கற்கலால் அமைக்கப்பட்ட தேரின் மீது சிலை நிறுவப்பட்டுள்ளது. சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயில் 14-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் கட்டப்பட்டு, 1980-ஆம் ஆண்டில் ”பாலமுருகனடிமை சுவாமி” என்பவரால் புனரமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் அர்ச்சனைகள் அனைத்தும் தமிழில் செய்யப்படுகின்றன. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • ரத்தினகிரி கோயில்

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 115 கி.மீ. கள்

தொடர்வண்டி வழியாக

வாலாஜா பேட்டை புகைவண்டி சந்திப்பிலிருந்து 18 கி.மீ. கள்

சாலை வழியாக

இராணிப்பேட்டையிலிருந்து 10 கி.மீ. கள்