மூடு

டெல்லி வாயில், ஆற்காடு

வகை வரலாற்று சிறப்புமிக்கது

கி.பி.18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டின் நவாப் உரிமைக்காக சந்தாசாஹிப்பிற்கும் முகமதுஅலிக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் முகமது அலி சார்பாக போரில் நுழைந்தனர். 26.8.1751-ஆம் நாளன்று முகமது அலியின் சார்பாக ஆங்கிலப்படைகள் ஆற்காட்டில் நுழைந்து போட்டியாளரான சந்தாசாகிப்பை கோட்டையை விட்டு விரட்டி இராபட் கிளைவ் தலைமையில் வெற்றிகண்டனர். இராபட் கிளைவின் இவ்வெற்றியே பின்னாளில் ஆங்கிலேயர் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. எனவே தனது வெற்றியின் நினைவாக இராபட் கிளைவ் கட்டிய இக்கட்டடமே டெல்லி வாயில் என அழைக்கப்படுகின்றது. இந்த டெல்லி வாயில் நுழைவாயில் தரைத்தளம், முதல்தளம் என இரு பகுதிகளை கொண்டது. தரைத்தளத்தின் நுழைவுவாயிலின் இரு புறமும் ஆயுதகிடங்காக பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் காற்றோட்டமாக வீரர்கள் தங்கவும், அங்கிருந்தே அவர்களின் எதிரிகளின் வருகையையும் நடமாட்டத்தையும் கண்காணிக்க வசதியாகவும், பீரங்கிகள் பொருத்தி பீரங்கி தாக்குதல் நடத்த ஏதுவாகவும் உள்ளவாறு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான செங்கல் மற்றும் சுதைகளை கொண்டு சுமாா் 4 அடி அகலத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது போற்றத்தக்கதாகும்.

புகைப்பட தொகுப்பு

  • முழு தோற்றம், டெல்லி நுழைவாயில், ஆற்காடு
  • பக்கவாட்டு தோற்றம், டெல்லி நுழைவாயில், ஆற்காடு
  • பின்புறம் தோற்றம், டெல்லி நுழைவாயில், ஆற்காடு