மூடு

மகேந்திரவாடி

வகை வரலாற்று சிறப்புமிக்கது

அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இச்சின்னத்தினை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.

இக்குடைவரை கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழமையான குடைவரைகளில் ஒன்றாகும். இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். இக்குடைவரைக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் என்று மகேந்திர பல்லவன் பெயரிலேயே பெயரிடப்பட்டுள்ளதை இங்குள்ள மகேந்திர வர்மன் காலத்து கிரந்த கல்வெட்டு நமக்கு தெளிவாக்குகின்றது.
வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். காண்போரை கவரும் வண்ணம் இரு முழுதூண்களுடன் இரு அரைத்தூண்களுடனும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது. தூண்களில் போதிகை மட்டுமே குடையப்பட்டுள்ளது மிகவும் எளிமையாக உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • குடைவரை கோயில், மகேந்திராவாடி
  • பிரதான கருவறை, குடைவரை கோயில், மகேந்திராவாடி
  • கல்வெட்டுகள், குடைவரை கோயில், மகேந்திராவாடி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 88 கி.மீ. கள்

தொடர்வண்டி வழியாக

வாலாஜா பேட்டை புகைவண்டி சந்திப்பிலிருந்து 27 கி.மீ. கள்

சாலை வழியாக

இராணிப்பேட்டையிலிருந்து 35 கி.மீ. கள்