மூடு

காணத்தக்க இடங்கள்

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் - சோளிங்கர்

வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும் ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில் சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

 

 


பாலமுருகன் கோயில்

பாலமுருகன் கோயில்

ரத்னகிரி பாலமுருகன் கோயில் வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.

 

 

 

 

 


ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்

ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக இரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது. ராஜா தேசிங்கு `கப்பம்’ கட்ட மறுத்ததால், செஞ்சிக்கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் படையெடுத்து ராஜாவைக் கொன்றனர். ராஜா தேசிங்கின் உடல் எரிக்கப்பட்டபோது, அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.
இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ஆற்காடு பாலாற்றின் மறு கரையில் ராஜாவுக்கும், ராணிபாயிக்கும் பளிங்குக் கற்களால் மணிமண்டபங்களை எழுப்பினார். ராணியின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில்தான் `ராணிப்பேட்டை’ நகரையும் உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது.