மூடு

அருங்காட்சியகம்

ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு

 
ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் புதிய வரலாற்று சான்றுகளை கண்டறியவும் தொல்லியல் அககழாய்வுகள் நடத்தப்படுகின்றன.அவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருள்களை அப்பகுதி மக்களும் மாணவர்களும் கண்டு பயனுறுவிதமாக அகழ்வைப்பகங்கள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆர்க்காட்டில் உள்ள அகழ் வைப்பகம் அவ்வகையைச் சார்ந்த ஒன்றாகும்.

முகலாய மன்னனான ஔரங்கசீப்பின் படைத்தலைவன் கல்பிகுஆர்கான் பதவியில் அமர்த்தப்பட்டு ஆர்க்காட்டில் முகலாய மன்னர் ஆட்சியை நிர்வகித்து வந்தான். கி.பி 1698-ஆம் ஆண்டு

(கி.பி. 1690-1703) ஆர்க்காட்டினை தமது ஆட்சியின் கீழ் நிர்வகித்து வந்தார். இவரது காலத்தில் ஆர்க்காடு “கர்நாடகப்பகுதி” –யின் தலைநகராகத் திகழ்ந்தது. இக்காலக்கட்டத்தில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆர்க்காட்டினை ஆண்ட கடைசி மன்னன் கௌசிகான் (கி.பி. 1842-1855) ஆவான். லார்டி டெல்ஹெசி பிரபு, டாக்டிரின் ஆப்லேப்சஸ் என்ற சட்டத்தின் மூலம் கர்நாடகப் பகுதியினை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். 1982- ஆம் ஆண்டு இஸ்லாமிய கட்டடக்கலை, கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறும் முகமாக இவ்வகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது. வேலூரிலிருந்து, ஆர்க்காடு 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிடும் நூல்கள் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. நூல்களை சலுகை விலையிலும் பெற்றுச் செல்லலாம்.

இவ்வகழ்வைப்பகம் வெள்ளிக்கிழமைத் தவிர, வாரத்தின் ஏனைய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை நாளாகும். பெரியவர்கள் நுழைவு கட்டணமாக ரு.5-ம் சிறியவர்கள் நுழைவுக்கட்டணமாக ரு.3-ம் செலுத்த வேண்டும்.

காட்சிப் பொருட்கள்

கற்சிற்பங்கள், சுடுமண் உருவங்கள், காசுகள், இஸ்லாமிய கலைப்பொருட்கள், பீங்கான் பொருட்கள், இரும்புப் பொருட்கள், மரப்பொருட்கள் ஆகியவற்றுடன் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.