மூடு

மக்கன் பேடா

Type:   பனிக்குழைவு மற்றும் இனிப்பு வகைகள்
ஆற்காடு மக்கன் பேடா

ஆற்காடு பகுதியில் மிகவும் புகழ்பெற்ற பலதலைமுறைகளைக் கண்ட ஒரு இனிப்பாக ”மக்கன் பேடா” என்ற பெயரிலான இனிப்பு உள்ளது. இன்றளவும் புகழ்பெற்ற ஒரு இனிப்பாக மக்கன் பேடா உள்ளது.
இது மைதா மற்றும் சர்க்கரை இல்லாத பால்கோவாவைக் கொண்டு கலவையாக செய்து எலுமிச்சை அளவு உருண்டைகலாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வுருண்டைக்குள் உலர் பழங்கள் வைக்கப்பட்டு தயார் செய்து எண்ணையில் தங்கநிறம் வரும்வரை பொரித்து, சர்க்கரைப்பாகில் குறைந்தப்பட்சம் 10 மணி நேரமாவது ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது.
இது சுவையில் குலோப் ஜாமுன் போன்றிருக்கும். இதனை சுவைக்கும் பொழுது இதனுள் வைக்கப்பட்டிருக்கும் முந்திரி. திராட்சை. பூசணி விதை, வெள்ளரி விதை போன்ற உலர் பழங்கள் ஆகியவை இதற்கான தனித்துவ சுவையினை வழங்குகிறது.